மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்
மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்
நமது பந்து வீச்சு அத்தனை பிரமாதமில்லை. பேட்டிங்க் முக்கிய ஆட்டங்களில் பரிபளித்தாலொழிய கோப்பையை வெல்வது அத்தனை சுலபமில்லை. கேப்டன் தோனியின் அதிர்ஷ்டம் (IPL-இல் கைகொடுத்தது போல) கடினமான தருணங்களில் கை கொடுக்கும் என்று நம்புவோம் :) உலகக்கோப்பை கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற, கிரிக்கெட் பிரபலங்களையும், இன்னபிற செலிபிரிடி (கிரிக்கெட்) ஞானசூன்யங்களையும் இந்தியா தான் Hot favaourites என்று மீடியாக்களில் 24 X 7 சொல்ல வைப்பது ஒரு விளம்பர யுக்தி. பின், பங்களாதேஷையும், நியூசிலாந்தையும், வெஸ்ட்-இண்டீஸையும் முன்னிறுத்தினால், விளம்பரம் கிடைக்குமா அல்லது துட்டு தான் தேறுமா?
இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் நடைபெற்ற மிர்பூர் பற்றி சில தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன! மிர்பூரின் கற்றவர் எண்ணிக்கை (Literacy rate) 69% (பங்களாதேஷின் தேசிய லிடரசி அளவான 49% உடன் ஒப்பிட்டால் இது மிக அதிகம்). நோபல் பரிசு பெற்ற கிரமீன் வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு தான் உள்ளது.
மேலே எழுதியிருப்பது, இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னமே எழுதியது!
சரி, ஆட்டத்துக்கு போலாமா? முதலில் 2007-ல் நடந்த debacle-ஐ மனதில் கொண்டு இந்த ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். சனிக்கிழமைகளில் மாலையில் குளிக்கும் பழக்கமுடைய நான், நேற்று சீக்கிரமே குளித்து விட்டு, பயபக்தியுடன் "விஷ்ணு" பழமாக டிவி முன் ஆஜரானேன்! பங்களாதேஷ் செய்த முதலும் கடைசியுமான தவறு டாஸில் ஜெயித்து இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது தான்! இலக்கு என்று ஒன்று இல்லையென்றால், நமது மட்டையாளர்கள் சற்று சுதந்திரமாக தைரியமாக விளையாடுவார்கள்!
அது போலவே, சச்சினும் சேவாகும் முதல் 4 ஓவர்களில் விளாசிய விளாசலில், ஸ்கோர் 36-0. சுழற்பந்து வீச்சாளர்கள் வந்தவுடன் விளாசல் சற்றே குறைந்தது என்று கூறலாம். 11வது ஓவரில் இல்லாத ரன்னுக்கு ஓடி சச்சின் ஆட்டமிழந்தார். 69-1. ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏதுவானதாக இல்லாதபோதும், சேவாகும், கம்பீரும், சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். 24வது ஓவரில் கம்பீர் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 153-2. சேவாக் அதிரடியை சற்று குறைத்துக் கொண்டு ஆடியது இந்த ஆடுகளத்தில் சரியான அப்ரோச் என்று நினைக்கிறேன்.
இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று தோன்றியது. தன்னம்பிக்கை மிக்க விராத் கோலி முதலில் சற்று நிதானமாகவே ஆடினார். , Batting power play -இல் (35 to 39, 5 ஓவர்கள்) சேவாகும், கோலியும் 48 ரன்களே எடுத்தபோதிலும், கடைசி 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்ததில், ஸ்கோர் 370-ஐ எட்டியது. சேவாக் 175, கோலி 100 ரன்கள்.
பங்களாதேஷ் பந்துவீச்சில், ரூபெல் ஹொசைன், கேப்டன் ஷகீப் இருவர் மட்டுமே, சேவாக்-கோலி செய்த துவம்சத்தின் இடையிலும் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொண்டனர். இந்தியா 300-ஐ தாண்டியபின், டிவி கேமரா அரங்கில் இருந்த பார்வையாளர்களிடம் ஒரு ரவுண்ட் வந்தபோது, பல இருக்கைகள் காலியாக இருந்தது போல் தெரிந்தது எனது பிரமையா என்று தெரியவில்லை! யாராவது இதை கவனித்தீர்களா?
பங்களாதேஷ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அகில உலகமே தெளிவாக இருந்தபோது, ஸ்ரீசாந்த் (ஐகாரஸ் பிரகாஷ் இவரை காமெடி பீஸ் என்கிறார்!) தனது 3வது ஓவரில் 24 ரன்கள் தாரை வார்த்து, மக்களுக்கு ஆட்டத்தில் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொண்டார். பங்களாதேஷ் ஸ்கோர் 5 ஓவர்களில் 51-0. இருந்தும், இலக்கு 370 என்பதால், இந்தியாவில் யாருக்கும் ரத்த அழுத்தம் கூடவில்லை!
எனக்குப் பிடித்த தமீம் இக்பால் இன்னும் சற்று அதிரடியாக ஆடியிருக்கலாம் என்று தோன்றியது. சாகீரும், முனா·பும், அதற்குப் பின் வந்த ஹர்பஜனும், யுவராஜும் ஒழுங்காக பந்து வீசியதில். பங்களாதேஷின் ரன்ரேட் எந்த ஒரு நிலையிலும், 6-ஐ தாண்டவில்லை. தேவையான ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. 30 ஓவர்களின் முடிவில், தேவையான ரன்ரேட் 10.1.
பங்களாதேஷ் 2 விக்கெட்டுகளே இழந்திருந்தாலும், தமீம், ஷகீப் தவிர்த்து அதிரடியாக ஆடக்கூடியவர்கள் யாரும் இல்லாததால், ஸ்ரீசாந்த் தனது முழு கோட்டாவான 10 ஓவர்கள் பந்து வீசினாலொழிய இந்தியா தோற்பதற்கு வாய்ப்பே இல்லை ;-) பங்களாதேஷின் பேட்டிங்கைப் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை. தமீம் இக்பாலும், ஷகீபும் அரைச்சதங்கள் எடுத்ததால், ஸ்கோருக்கு ஒரு மரியாதை கிட்டியது, 283-9. முனா·ப் 4 விக்கெட்டுகள்.
இந்த வெற்றியை வைத்து எதிர்பார்ப்பை அதிகமாக்கிக் கொள்வது யாருக்கும் நல்லதல்ல! முதல் சுற்றில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது என்பதை வைத்துத்தான், இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறித்து எதுவும் கூற இயலும்! Just to reiterate, நான் மேலே கூறியதை ("பேட்டிங்க் முக்கிய ஆட்டங்களில் பரிபளித்தாலொழிய இந்தியா கோப்பையை வெல்வது அத்தனை சுலபமில்லை" என்பதை) இந்த ஆட்டம் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.
How the middle order plays the middle overs when the top-order calls in sick is where matches will be won and lost for skipper Dhoni - Faisal Shariff (in Rediff.com)
என்றென்றும் அன்புடன்,
பாலா
1 மறுமொழிகள்:
Test comment
Post a Comment